Breaking News

காஞ்சிபுரத்தில் விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணி

காஞ்சிபுரம், ஜன.26:

விளை பொருட்களை சந்தைப்படுத்துதலுக்கான புதிய கொள்கை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிராக்டர்கள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியிலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை டிராக்டர்கள் பேரணி நடைபெற்றது.பேரணி தொடக்க விழாவிற்கு சங்க தலைவர் எஸ்.ஆனந்த் தலைமை வகித்தார். 

சங்க மாநில துணை செயலாளர் கே.நேரு,காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் என்.சாரங்கன்,நிர்வாகிகள் ஏ.மூர்த்தி,டி.ஸ்ரீதர், என்.நந்தகோபால்,சிவப்பிரகாசம் ஆகியோர் உட்பட விவசாயிகள் பலரும் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்டனர். 

விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மின்சார துûறைய தனியாருக்கு விற்கக் கூடாது,புது தில்லியில் போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் எந்த இடத்திலும் விவசாயிகளின் விளைநிலங்களை எந்தக் காரணத்துக்காகவும் அவர்களது அனுமதியின்றி கையகப்படுத்தக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடைபெற்றது. 

தேசியக்கொடி மற்றும் கட்சிக் கொடியுடனும் விவசாயிகள் டிராக்டரிலும்,இருசக்கர வாகனங்களிலும் ஊர்வலமாக வந்தனர்.

No comments

Thank you for your comments