காஞ்சிபுரத்தில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு
காஞ்சிபுரம், ஜன.19:
காஞ்சிபுரம் காந்தி சாலையில் தேரடி அருகில் உள்ள சிஐடியூ அலுவலகத்தில் நடைபெற்ற தியாகிகள் தினத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் கே.ஜீவா தலைமை வகித்தார்.
சிஐடியூ அமைப்பின் மாவட்ட தலைவர் டி.ஸ்ரீதர்,மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார், எஸ்.சீனிவாசன், ஆர்.மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் கே.நேரு, மாவட்ட தலைவர் எஸ்.ஆனந்த்,மாவட்ட செயலாளர் என்.சாரங்கன், மாவட்ட பொருளாளர் கே.செல்வம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது விவசாயிகள் சங்கத்துக்கு நிதியுதவியாக சிஐடியூ சார்பில் ரூ.14 ஆயிரமும், கைத்தறி சங்கம் சார்பில் ரூ.1000 உட்பட ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.
No comments
Thank you for your comments