தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாமியர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி
காஞ்சிபுரம், ஜன.19:
காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி வாசலில் இஸ்லாமியர்களுக்காக நடைபெற்ற நல்லொழுக்கப் பயிற்சி முகாமிற்கு கிளையின் தலைவர் யூசுப் தலைமை வகித்தார்.மாவட்ட துணைச் செயலாளர் அன்சாரி,துணைத் தலைவர் சாகுல்ஹமீது, ஆசிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் பாசில் வரவேற்று பேசினார்.
அமைப்பின் மாநில பேச்சாளர்கள் ஹசேன், அப்துல் ரஷீத் ஆகியோர் மது அருந்துதல், புகை பிடித்தல்,வட்டி வாங்குதல், வரதட்சனை வாங்குதல் உள்ளிட்ட சமூக தீமைகள் இஸ்லாத்தில் இல்லை என்றும் அதற்கான காரணங்கள் மற்றும் தீமைகள் குறித்தும் விரிவாக விளக்கி பேசினார்கள்.
முஜ்புர் ரகுமான் நன்றி கூறினார். பயிற்சி முகாமில் திரளான இஸ்லாமியப் பெண்கள்,ஆண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments
Thank you for your comments