Breaking News

வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம் :

வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா, மாவட்ட செயலாளர்  க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. 


காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் விழா பரந்தூர் கிராமத்தில் நடைபெற்றது.

வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர் படு நெல்லி  பிஎம்.பாபு ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் 

க.சுந்தர் எம் எல் ஏ, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன் ஆகியோரை மாட்டு வண்டியில் அமர வைத்து அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் கிராமத்துப் பெண்கள்  புதுப் பானையில்  பொங்கல் செய்யும் பணியை பொங்கலோ பொங்கல் எனக் கூறி பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்துரை கூறி கட்சியின்  கிராமப்புற கிளைக் கழக கட்சி நிர்வாகிகளுக்கு புத்தாடைகளை வழங்கி கௌரவப்படுத்தினார்கள். 

பொங்கல் விழாவில் ஒன்றியக் குழு தலைவர் ஆர் கே தேவேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராஜ் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments