கோவையில் மீண்டும் கார் பந்தயம்!
கோவை மாவட்டம் ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் எம்.கே. சந்தர் நினைவு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வி.கே.ராஜகோபால் கூறியதாவது
இந்த கார் பந்தயம் வருகிற11-ந் தேதி காலை கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப்பில் இருந்து புறப்படுகிறது.இந்த பந்தயத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார் பந்தய தூரம் 340 கி.மீ ஆகும் இதில் 50 கார்கள் பங்கேற்கின்றன இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ1லட்சம், 2-வது பரிசு ரூ50,000, 3-வது பரிசு ரூ25 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழக்கப்படுகிறது.இதன் பரிசளிப்பு விழா 12 -ந்தேதி ரேஸ் கோர்ஸில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப்பில் மாலை நடக்கிறது.
இவ்விழாவில் போலீஸ் முன்னாள் டி.ஜி.பி.ஏ.கே.விஸ்வநாதன்,எப் ஒன் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கார் பந்தய வீரர்களுக்கு பரிசு கோப்பையும் பணமுடிப்பும் வழங்க உள்ளனர் இப்பந்தயத்துக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பிரிதிவிராஜ் சந்திரசேகர், விஜயகுமார், பாலமுருகன் ராமசாமி ஆகியோர் செய்து வருகிறார்கள் என தெரிவித்தார்.
No comments
Thank you for your comments