Breaking News

தேவரியம்பாக்கத்தில் 100 நாள் பணிகளை பாராட்டிய மத்திய அரசு இயக்குனர்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம்  வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள தேவரியாம்பாக்கம் ஊராட்சியில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களால்  பல்வேறு பணிகள் ஊராட்சித் தலைவர் அஜய்குமார் தலைமையில் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றன.



இந்த ஊராட்சியில்  தமிழகத்தின் பூர்வீகமான  16,000 மரக்கன்றுகள் நான்கு குறுங்காடுகளிலும், ஏற்கனவே உள்ள நீர்நிலைகளை புதுப்பிப்பதுடன் நான்கு புதிய கசிவு நீர்க்குட்டைகள், தடுப்பணைகள் உருவாக்கியதுடன்  ஏரிக்கரைகள் சாலை ஒரங்கள் மற்றும் ஊராட்சி காலி இடங்களில் பனை விதைகள் மட்டுமே இதுவரை 25,000 எண்ணிக்கையில் விதைக்கப்பட்டுள்ளன.

100 நாள் பணியாளர்கள் என்றாலே வேலையே செய்வதில்லை என்ற பொதுவான ஆருடத்தை பொய்யாக்கும் வகையில் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள 100 நாள் வேலை பணியாளர்கள் பல்வேறு சொத்துக்களை முழு ஈடுபாட்டுடன் ஆக்கபூர்வமாக உருவாக்கி நிரூபித்து காட்டியுள்ளனர் 

இச்சொத்துக்களை  பார்வையிட்ட தேசிய ஊரக வேலை உறுதி திட்ட இயக்குனர் சஞ்சயகுமார் வெகுவாக பாராட்டினார் 

இவர்களுடன் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் குமார்   காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி, செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் மற்றும்  வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

இது  குறித்து தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் கூறியதாவது 

தேவராம்பாக்கம் கிராம ஊராட்சியில் உள்ள 100 நாள் பணியாளர்கள் ஒவ்வொரு வருடமும் அடுத்த ஆண்டுக்கான தொழிலாளர் மதிப்பீட்டு அறிக்கை அதாவது லேபர் பட்ஜெட் தயாரிக்கின்றனர்.

அதன்படி அவர்களாலேயே பணிகள்  தேர்வு செய்யப்பட்டு பின் அரசால் ஒப்புதல் பெறப்பட்டு அப்பணிகளை  திட்டமிட்டு  செய்து முடித்து வருகின்றனர்

100 நாள்  தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி என்றாலே ஏமாற்று வேலை என்பதை பொய்யாக்கும் வகையில் எங்கள் ஊராட்சியில் அப்பனிகளை சிறப்பாக செய்து அதற்குரிய சொத்துக்களாக இப்பணியாளர்கள் உருவாக்கி உள்ளனர்  

அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வருடத்திற்கு 100 நாள் என்பதிலிருந்து 150 நாட்களாக உயர்த்தி வேலை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

No comments

Thank you for your comments