காஞ்சிபுரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
காஞ்சிபுரம், ஜன.17:
அதிமுக காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் சார்பில் தேரடி அருகில் கட்சியின் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.இந்நிகழ்வில் கட்சியின் அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத்.பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர்.மன்ற செயலாளர் காஞ்சி.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் மாவட்ட எம்ஜிஆர்.மன்ற செயலாளர் ஆர்.டி.சேகர், அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யு.சோமசுந்தரம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டு எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். ஏற்பாடுகளை கட்சியின் பகுதி கழக செயலாளர் பாலாஜி செய்திருந்தார்.
No comments
Thank you for your comments