காஞ்சிபுரம் மாவட்ட பாஜக புதிய தலைவராக உ.ஜெகதீசன் தேர்வு
காஞ்சிபுரம், ஜன.19:
காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவராக கே.எஸ்.பாபு இருந்து வந்தார்.இவருக்கான பதவிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.மாவட்ட தலைவர் பதவிக்கு 19 பேர் விருப்பமனு செய்திருந்தனர்.
இவர்களில் திமுகவை எதிர்த்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்காக பலமுறை சிறை சென்றவரும்,காஞ்சிபுரம் நகர் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்க உ.ஜெகதீசன்(49) தலைவராக தேர்வு செய்யப்பட்டு கட்சித் தலைமை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கட்சியின் நிர்வாகிகள் பலரும் புதிய தலைவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments