Breaking News

முத்தியால்பேட்டையில் ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

காஞ்சிபுரம், ஜன.17:

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் ஓபிஎஸ் அணி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்குவதையும் தொடக்கி வைத்தார்.


முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர்கள் சார்பில் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்தினை அணியின் மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் திறந்து வைத்து மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.

பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடக்கி வைத்தார். இதனையடுத்து அணியின் நிர்வாகிகளான மாவட்ட பொருளாளர் ஏ.வஜ்ரவேலு, துணைச் செயலாளர்கள் கே.சகுந்தலா கோபால், சோமங்கலம் ரமேஷ், செயலாளர் வாலாஜாபாத். ஜெயகாந்தன் ஆகியோரும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் அணியின் ஒன்றிய செயலாளர்கள் அருண், கோவிந்தராஜ், மாகரல் சசி, உத்தரமேரூர் குலசேகரன், நிக்சன் ஆகியோர் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments