காஞசிக்கு நேர்த்திக் கடன் செலுத்த வந்த கர்நாடக துணை முதலமைச்சர்டி.கே. சிவக்குமார்

காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேர்த்திக் கடன் செலுத்த வந்த கர்நாடக துணை முதலமைச்சர்டி.கே. சிவக்குமார்.

உலக நன்மை வேண்டி சக்கரத்தாழ்வார் சன்னதியில் மகா சுதர்சன யாகம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.



கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் ஒரு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். 

கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரித்திங்கரா தேவி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார். 

காஞ்சிபுரம் வருகை தந்த கர்நாடகா துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். 

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காஞ்சிபுரம் வருகை தந்து  வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வேண்டிக் கொண்ட நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதலமைச்சர் ஆக பதவி வகித்து வருகிறார். 

இதனை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேர்த்திக் கடனை செலுத்தும் விதமாக கோவிலுக்கு வருகை தந்து சக்கரத்தாழ்வார் சன்னதியில் , கோபூஜை செய்து,மகா சுதர்சன யாகம் மேற்கொண்டு நேர்த்திக் கடனை செலுத்தி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.வேத பாராயண கோஷ்டியினர் 100 பேருக்கு தானங்களை வழங்கினார்.

காஞ்சிபுரத்தில் கர்நாடகா துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் பேட்டி :

திருப்பதி இறப்பு குறித்து எந்தவித கருத்து கூற விரும்பவில்லை, அது அந்த மாநிலத்தினுடைய சட்ட ஒழுங்கு பிரச்சனை. 

கர்நாடக மேகதாது அணை பிரச்சனைகள் நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில்  தமிழகத்திற்கு உதவியாகவும்போராடி வருகிறோம்,

அரசியல் கட்சிகளும் அறிவார்கள்,

ஆகவே

நீதிமன்றம் நல்ல தீர்ப்பினை வழங்கும்.


465 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது அதனை சேமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இரு மாநில அரசுகளும் மேற்கொண்டு  வருகிறோம். 

நேற்று சரணடைந்த ஆறு நக்சலைட்டுகள் விவகாரத்தில்  மூன்று மாநிலத்தைச் சேர்ந்த அவர்களும் உள்ளனர்.

இனி வரும் காலங்களில் கர்நாடகா நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் 

ஒரே நாடு ஒரே தேர்தலை பொருத்தவரையில் கர்நாடகம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது காங்கிரஸ் மேலிட தலைமை எடுக்கும் முடிவின்படி நடந்து கொள்வோம்.




No comments

Thank you for your comments