குடியரசு தின கிராம சபைக் கூட்டத்தில் 100 நாள் பணியாளர்களின் ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி தீர்மானம்
காஞ்சிபுரம் :
அதில் அடுத்த நிதியாண்டுக்கான (2025-2026) கிராம வளர்ச்சி திட்டம் மற்றும் 100 நாள் பணிகளுக்கான லேபர் பட்ஜெட் எனப்படும் தொழிலாளர் வரவு செலவு அறிக்கை ஆகியன தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
மேலும் இவ்வூராட்சியில் உள்ள பழமை வாய்ந்த புத்தர் சிலையை வைத்து புதிய எழுப்ப வேண்டி அரசுக்கு வலியுறுத்தியும் ,
டான்பிநெட் எனப்படும் அதிவேக இணைய தள வசதியை கிராம வறுமை ஒழிப்பு சேவை மையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுப்பது போல ஊராட்சி அலுவலகம், அரசு பள்ளிகள் அனைத்துக்கும் வழங்க வேண்டியும்,
மெட்ரோ ரயில் வழிதடம் கிண்டியிலிருந்து தாம்பரம் படப்பை வழியாக வாலாஜாபாத் காஞ்சிபுரதிற்கு அமைக்கப்பட வேண்டும் எனவும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட 100 நாள் பணியாளர்களுக்கான ஊதியம் நவம்பர் 20, 2024 முதல் இதுவரை வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க வலியுறுத்தியும்,
தேவரியம்பாக்கத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைந்து திறப்பு விழா செய்ய வலியுறுத்தியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இதில் துணைத் தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர்கள் சாந்தி, ஞானவேல், பூபதி, சூரியகாந்தி, கற்பகம், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் பாளையம் ரவி, எல்லப்பன், பொதுமக்கள், இளைஞர்கள் என திரளாக பங்கேற்றதுடன் ஊராட்சி வளர்ச்சி குறித்து பல்வேறு விவாதங்கள் ஆரோக்கியமான முறையில் நடத்தப்பட்டன.
இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் அனைத்து கேள்விகளுக்கும் ஊராட்சித் தலைவர் அஜய்குமார் உரிய விளக்கத்துடன் பதில் அளித்ததை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.
No comments
Thank you for your comments