இரு சக்கர வாகன ரைடர்களுக்காக பிரத்யேக ரைடிங் கியர்ஸ் ஷோரூம் ..!
கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலை, பகுதியில் தாட்கோ எதிரே சாரா டவர்சில், அட்வென்ச்சர் ஷாப் என்னும் இருசக்கர வாகனத்திற்கான ரைடிங் கியர்ஸ் ஷோரூம், தற்போது புதுப்பிக்கப்பட்டு ரைடர்ஸ் ரேன்ச் (Riders Ranch) என்னும் பெயரில் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சரவணம்பட்டி பகுதியில் சேர்ந்த ரைடர் குரு சிறப்பு விருந்தினராக, கலந்து கொண்டு ரைடர்ஸ் ரேன்ச் (Riders Ranch) கடையை திறந்து வைத்தார்.
இங்கு இருசக்கர வாகனத்திற்கான உபகரணங்கள் மற்றும் ஓட்டுநர்களு க்கான ரைடிங் கியர்ஸ் என்று இரண்டு பிரிவுகளாக, இரண்டு இடத்தில் மேன் அண்ட் மிசின் என்னும் கான்செப்டில் துவங்கப்பட்டுள்ளது டாக்டர் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள ரைடர்ஸ் ரேன்சில்(Riders Ranch) என்னும் இருசக்கர உபகரணங்களும் ஜிகேடி நகர் பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ரைடர்ஸ் ரேன்சில் ஓட்டுநர்களுக்கான ரைடிங் கியர்ஸ் துவங்கப்பட்டுள்ளது. மேலும் துவக்க விழாவை முன்னிட்டு, ஜனவரி 20 முதல் 25 வரை சில பொருட்களுக்கு சிறப்பு சலுகையாக 30% வரை தள்ளுபடி விற்பனை, துவங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரைடர்ஸ் ரேன்ச் Riders Ranch இயக்குனர்களான, சிவகுமார் பிரேமலதா மற்றும் அவரது மகன் அபிஷேக் ஆகியோர் அளித்த பேட்டியில் தாங்கள் கோயம்புத்தூரில் வசிப்பதும், கோயம்புத்தூர் வாசி என்பதிலும் இங்கு சுமார் 16 வருடங்களாக இருசக்கர வாகனத்திற்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஓட்டுனருக்கான உடைமைகள் மற்றும் மழையேற்றம், வனவிலங்கு மேலாண்மை உபகரணங்கள் விற்பனை செய்து வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம், என்றனர். மேலும் இங்கு வரும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு தரமான பிராண்டும் தொழில்நுட்பத்தில் சிறந்த உபகரணங்களும் அதே சமயத்தில் சிறப்பான வாடிக்கையாளர் சேவைகளும் நாங்கள் திறம்பட செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்.
எங்களது ஷோரூமில் இருசக்கர வாகன ரைடர்களுக்கு தேவையான அனைத்து விதமான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் தரமானதாக வழங்கி வருகிறோம் . அதனால்தான் நாங்கள் இத்தனை வருடங்களாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அலுவலக பணியாளர்கள் விற்பனையாளர்கள் ரைடர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments