விழுதவாடி ஏரியில் 3 இளைஞர்கள் சடலமாக மீட்பு - கொலையா?.. போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம், ஜன.15:
காஞ்சிபுரம் மாவட்டம் விழுதவாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கையில் 3 இளைஞர்கள் புதன்கிழமை சடலமாக மிதந்தது தொடர்பாக உத்தரமேரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியம் காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது விழுதவாடி கிராமம்.இக்கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் 17 வயது மதிக்கத்தக்க 3 இளைஞர்கள் சடலமாக மிதப்பதாக உத்தரமேரூர் போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், ஆய்வாளர் சங்கர்சுரேஷ், சார்பு ஆய்வாளர் மாரி செல்வம் ஆகியோர் தீயணைப்புத்துறையினருடன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் 3 இளைஞர்களும் வாலாஜாபாத் அருகேயுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருவதாகவும், இவர்கள் காஞ்சிபுரம் அருகே பழையசீவரம் பகுதியை சேர்ந்த விஷ்வா(17) சத்ரியன்(17) பரத்(17) என்பதும் தெரிய வந்துள்ளது.
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments