காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.29 லட்சம் மதிப்பில் உடனாளர்கள் காத்திருப்பு கூடம் - எம்எல்ஏ திறந்து வைத்தார்
காஞ்சிபுரம், ஜன.22:
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள்,பொதுமக்கள் பலரும் மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வரும் உடனாளர்கள் காத்திருப்புக் கூடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு எம்எல்ஏ எழிலரசனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று சட்டப் பேரவை உறுப்பினர் தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.29லட்சம் மதிப்பீட்டில் உடனாளர்கள் காத்திருப்புக் கூடம் புதியதாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
காத்திருப்பு கூடத்தை திறந்து வைத்த பின்னர் எம்எல்ஏ எழிலரசன் கூறுகையில் இக்கூடத்தில் குடிநீர்வசதி,தொலைக்காட்சி வசதி, பொருட்கள் வைக்கும் பகுதி,காற்றோட்ட வசதி உள்ளிட்டவைகளுடன் உடனாளர்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்வில் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் சிவப்பிரகாசம், சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநர் நளினி,அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், நிலைய மருத்துவ அலுவலர் பாஸ்கரன், திமுக பொருளாளர் ஆறுமுகம், மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் சந்துரு, திமுக பகுதி செயலாளர்கள் திலகர், வெங்கடேஷ் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பூப்பந்தாட்ட அரங்கம் கட்ட அடிக்கல்
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து ரூ.29 லட்சம் மதிப்பில் பூப் பந்தாட்ட அரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜையிலும் கலந்து கொண்டு எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி உட்பட பல்வேறு விளையாட்டுக்களின் பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments