மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உலகில் சாதனை படைத்த பூர்விகா
பூர்விகா மொபைல்ஸ் இந்தியாவின் மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் முன்னணி வகிக்கும் ஒரு பெரிய நிறுவனமாக திகழ்கிறது.
தொடக்கம் மற்றும் வளர்ச்சி
பூர்விகா மொபைல்ஸ் நிறுவனர் யுவராஜ் மற்றும் கன்னி யுவராஜ் ஆகியோர், மொபைல் சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கினார்கள்.
இந்நிறுவனம் 2004-ம் ஆண்டு சென்னையின் கோடம்பாக்கத்தில் 170 சதுர அடியில், சிறிய கடையாக தொடங்கப்பட்டது. பூர்விகா, தனது தரமான சேவை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொள்ளும் அணுகுமுறையின் மூலம், குறுகிய காலத்திலேயே மக்களின் நம்பிக்கையைப் பெற்றது.
தன்னுடைய சிறப்பான வாடிக்கையாளர் சேவை மற்றும் தரத்தின் மூலம் இன்று தமிழகம் தாண்டி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா என இந்தியா முழுவதும் தனது கிளைகளை திறந்தது.
பூர்விகா 470+க்கும் மேற்பட்ட கிளைகள், 4000-க்கும் அதிகமான ஊழியர்களுடன், சிறப்பான விற்பனையும் சேர்த்து, மிக பெரிய வெற்றி மற்றும் இந்தியாவின் நம்பர் 1 மொபைல் விற்பனையாளர் என்கிற பெயரையும் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.
புதிய பரிமாணம் - பூர்விகா அப்ளையன்சஸ்
பூர்விகா நிறுவனம் தனது அடுத்த கட்ட துவக்கமாக, பூர்விகா அப்ளையன்சஸ் என்னும் பெயரில், வீட்டு உபயோக பொருட்களுக்கான புதிய விற்பனை கிளையை தொடங்கியுள்ளது . இதுவரை குறைத்த விலையில் மொபைல் போன்கள் மற்றும் கேட்ஜெட்களை கொடுத்த இந்நிறுவனம் டிவி, ஏசி, பிரிட்ஜ்,வாஷிங் மெஷின், டிஸ்வாஷர், மிஸ்சி, கிரைண்டர் என மிக குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களையும் கொடுக்க முனைந்துள்ளது.
அனைத்து வகையான வீட்டு உபயோக பொருட்களை உள்ளடக்கிய மிக பெரிய விற்பனை ஷோரூம்-ஐ சென்னையின் கோடம்பாக்கம் நகரிலும், அண்ணா நகரிலும் திறந்து, தனது பயணத்தின் அடுத்த புதிய மைல்கல்லை பூர்விகா நிறுவனம், பூர்விகா அப்ளையன்சஸ் மூலமாக தொடங்கி அதன் கிளைகளையும் விரிவாக்கம் செய்து வருகிறனர். பூர்விகா அப்ளையன்சஸ் குறுகிய காலத்தில் 29+க்கும் மேற்பட்ட கிளைகளை தொடங்கி உள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதன் சேவை பரவலாக கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தரமான மொபைல்கள், அதிநவீன எலக்ட்ரானிக் சாதனங்கள், மற்றும் நம்பத்தகுந்த சேவைகளை வழங்குவதில் பூர்விகா மொபைல்ஸ் மற்றும் பூர்விகா அப்ளையன்சஸ் ஆன்லைன் விற்பனை, வாடிக்கையாளர் சேவை, மிக பெரிய ஷோரூம்கள், மற்றும் இன்னும் பல சிறப்பம்சகளுடன் மக்களின் நேரடி தேர்வாக இந்நிறுவனம் இடம் பிடித்துள்ளது.
2004-ம் ஆண்டு சிறிய தொடக்கமாக துவங்கிய பூர்விகா இன்று மிகப்பெரிய ஒரு வணிக அமைப்பாக வளர்ந்துள்ளது.
முன்னணி பிராண்ட்களின் சங்கமம்
மக்கள் பெரிதும் விரும்பும், எல் ஜி, வோல்டாஸ், டைகின், சாம்சங், சோனி, ஒன் பிளஸ், ரியல் மீ, ஹையர், பானசோனிக், ஐ.எப்பி, பட்டர்பிளை, ப்ரீத்தி வீகார்ட், பஜாஜ், பிலிப்ஸ், ப்ளூ ஸ்டார். பிரஸ்டீஜ்,மற்றும் இது போன்ற பலதரப்பட்ட பிராண்டுகளின் ஏ.சி.டி வீ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் டிஷ் வாஷர், குக் டாப், வாட்டர் ப்யூரிஃபைர், சீம்னீஸ், என வீட்டிற்கு தேவையான பெரிய அப்ளையன்சஸ்களையும், குக்கர் அயன்பாக்ஸ், வாட்டர் ஹீட்டர், ஜூஸ் மேக்கர், சேன்வெஜ்மேக்கர், வெட் கிரைண்டர், ரைஸ் குக்கர் என வீட்டிற்கு தேவையான சிறிய அப்ளையன்சஸ் களையும் மற்றும் இந்த வரிசையில் அனைத்து வித வீட்டு உபயோக பொருட்களையும் இந்த புதிய பூர்விகா அப்ளையன்சஸ் ஷோரூம் கொண்டுள்ளது. மக்கள் விரும்புகிற பிராண்டில், மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும் வசதியை பூர்விகா நிறுவனம் இதன் மூலம் உறுதிபடுத்தியுள்ளது.
தள்ளுபடி சலுகைகள் மற்றும் EMI வசதிகள்
பூர்விகாவின் வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலைகளில் பொருட்களை வழங்குவதை முன்னிலையாக வைத்துள்ளது. விலையின்றி பைனான்சிங் மற்றும் EMI வசதிகள் மிகவும் பிரபலமானவை.
தீபாவளி, பொங்கல், மற்றும் பிற முக்கிய விழாக்களில் தனித்துவமான சலுகைகளை அறிவிக்கிறது.
டிஜிட்டல் விற்பனை தளங்கள்
பூர்விகாவின் ஆன்லைன் தளமும் (www.poorvikamobile.com) அதன் விற்பனை மையங்களும் வாடிக்கையாளர்களுக்கு வசதியான பொருட்களை வழங்குகிறது.
ஆன்லைன் பிளாட்ஃபாரத்தின் வாயிலாக பூர்விகா தனது வாடிக்கையாளர்களுக்கு எளிய மற்றும் விரைவான வாங்கும் அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையதளம் மற்றும் பூர்விகா ஆப் மூலம், சலுகைகள் மற்றும் புது போன்களின் அறிமுகங்கள் தொடர்பான தகவல்களை அறிய முடிகிறது.
உயர்தர சேவை
பூர்விகாவின் சேவை மையங்கள் மொபைல் பழுது நீக்கும் பணிகளில் மிகவும் திறமையாக செயல்படுகின்றன. வாடிக்கையாளர்களின் குறைகளை விரைவாக தீர்ப்பதில் பூர்விகா முன்னிலை வகிக்கிறது.
வாடிக்கையாளர் சந்தோஷம்
“Think Mobile, Think Poorvika” என்ற மந்திரத்துடன், பூர்விகா அனைத்து வாடிக்கையாளர்களின் தேவைகளையும் கவனமாக நிறைவேற்றுகிறது.
பூர்விகா தனது வாடிக்கையாளர் மையமிடப்பட்ட வணிக முறை, நம்பகமான விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள், மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டின் வழியே மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.
பூர்விகாவின் நிறுவன கலாசாரம்
பூர்விகா ஒரு குடும்பத்தைப் போன்று செயல்படுகிறது. 4000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், அவர்கள் “Poorvikans” என அழைக்கப்படுகின்றனர், ஒரு குழுவாக இணைந்து பூர்விகாவின் வெற்றிக்கு பங்களிக்கின்றனர்.
புதிய பணியாளர்களுக்கு மேம்பாட்டு பயிற்சிகள்.
தன்னம்பிக்கையுடன் செயல்பட ஊக்கம் அளிக்கும் சூழல்.
வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சமநிலையை ஆதரிக்கும் முறைகள்.
வெற்றியின் ரகசியம்
பூர்விகாவின் வெற்றிக்கு காரணம் அதன் வாடிக்கையாளர் மையமிடப்பட்ட வணிக முறைமைகள். தரம், நம்பகத்தன்மை, மற்றும் வாடிக்கையாளர் மகிழ்ச்சியை முன்னிலைப்படுத்துவது இதன் முக்கிய இலக்காகும்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் அனைத்து பூர்விகா மையங்களிலும் ஒரே தரத்தைப் பராமரிக்கிறது.
சமூகப் பொறுப்புணர்வு
சமூகப் பொறுப்புடன் செயல்படும் பூர்விகா, பல்வேறு சமூக நலத்திட்டங்களில் ஈடுபடுகிறது. விலைகுறைப்பு திட்டங்கள், கல்வித் துறைக்கு உதவிகள் மற்றும் தொழில்நுட்ப அறிவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் செயல்பாடுகள் இதன் சமூக அக்கறையை காட்டுகின்றன.
விருதுகள்
பூர்விகாவின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் விதமாக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
Gem of India Award
Best Retailer in Tamil Nadu (Times Icon Awards)
Vocational Services Award (Rotary Club)
Excellence in Customer Service (Vikatan Pinnacle Awards)
இவற்றுடன், அந்தஸ்துமிக்க தொழில்முனைவோருக்கான விருதுகள் மிஸ்டர் உவராஜ் மற்றும் மிஸஸ் கன்னி உவராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்கால இலக்குகள்
நோக்கம்: உலகத்தரத்திற்குத் தகுந்த சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை செழுமையாக்குவது.
இலக்கு: இந்தியாவின் முன்னணி மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் விற்பனை நிறுவனமாக மட்டுமல்லாமல், ஒரு பில்லியன் டாலர் நிறுவனமாக மாறுவது.
பூர்விகா மொபைல்ஸ், மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் விற்பனை உலகில் புதிய உயரத்தை அடைந்த ஒரு முன்னணி நிறுவனம். தரம், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் பூர்விகா மொபைல்ஸ் மற்றும் பூர்விகா அப்ளையன்சஸ் இந்தியாவில் தனிச்சிறப்பாக திகழ்கிறது. அனைத்து தரப்பினருக்கும் எளிதில் அணுகக்கூடியதாய் இருக்கும் பூர்விகா, தனது செயல்பாடுகளை தொடர்ந்தும் மேம்படுத்தி வருகிறது.
பூர்விகா அப்ளையன்சஸ் கிளை திறப்பு
பூர்விகா தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. புதிய பரிமாண வளர்ச்சியில், நாளுக்கு நாள் பூர்விகா அப்ளையன்சஸ் ஷோ ரூம்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. அதன் அடையாளமாக, ஜனவரி 24-ஆம் தேதி தின்டிவனத்தில் மற்றும் ஜனவரி 26-ஆம் தேதி ஆற்காட்டில் பிரமாண்டமான அப்ளையன்சஸ் ஷோ ரூம்களின் விற்பனை தொடங்கவுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தரமான உபகரணங்களை அளிக்கத் தயாராக இருக்கும் இந்த புதிய கிளைகள், பூர்விகாவின் நம்பகத்தன்மையையும் வளர்ச்சியையும் மேலும் உறுதி செய்கின்றன.
வாடிக்கையாளர்கள் பார்வையில் பூர்விகா
1. மொபைலைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டல் : "பூர்விகா மொபைல் ஸ்டோரில் வாங்கிய அனுபவம் மிகவும் நேர்மையானது. என்னுடைய புத்தகப் பாணி மொபைலைத் தேர்ந்தெடுக்க உதவிய விற்பனையாளர் மிகவும் அன்பாகவும் உதவித்தனமாகவும் இருந்தார்." - கார்த்திக், சென்னை
"புதிதாக மொபைல் வாங்குவது எனக்கு சிரமமாக இருந்தாலும், பூர்விகா விற்பனையாளர் அணியினர் ஒவ்வொரு மாடலின் பயன்களை விளக்கி என்னை சரியான தேர்வுக்குச் சேர்த்தனர்." - சந்தியா, திருப்பூர்
2. சலுகைகளின் சொர்க்கம் : "பூர்விகா மொபைலில் விற்பனைக்கு வந்த மொபைல்களுக்கான சலுகைகள் நன்றாக இருந்தன. எனக்கு தேவையான மொபைலை மிதமான விலையில் வாங்க முடிந்தது." - சுமிதா, கோயம்புத்தூர்
3. ஆன்லைன் அனுபவம்: "பூர்விகாவின் ஆன்லைன் பிளாட்ஃபார்மின் மூலம் நான் போன்களை ஆர்டர் செய்தேன். மிக வேகமாக வந்தது, மற்றும் எந்த தவறும் இல்லை." - ரவி, மதுரை
4. தொழில்நுட்ப வழிகாட்டி : "புதிதாக மொபைல் பயன்படுத்துவதில் தெரியாதவர்களுக்கு பூர்விகா ஒரு நல்ல இடமாக இருக்கிறது. அவர்கள் எனக்கு மொபைலை எப்படி சரியாக பயன்படுத்துவது என நிறைய விளக்கமளித்தார்கள்." - அபினய், வேலூர்
5. சலுகைகள் மிகவும் ஈர்க்கும் : "போர்ட்பிளான்களுடன் கூடிய மொபைல்களுக்கான சலுகைகள் எனக்கு மிகவும் பிடித்தது. சிறந்த மதிப்புடன் வாங்கிய மொபைல் எனக்கு சரியான தேர்வாக உள்ளது." - மாரியப்பன், கரூர்
வாசகர்கள் பூர்விகா மொபைலின் சேவைகள் மற்றும் தரம் பற்றிய அனைத்து அனுபவங்களையும் நேர்மையாக பகிர்ந்துள்ளனர். ஏதேனும் சிரமங்கள் இருந்தாலும், அதன் விற்பனை குழுவின் மென்மையான அணுகுமுறை அனைவரையும் திருப்திப்படுத்தியுள்ளது. மேன்மேலும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதாக வாசகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
No comments
Thank you for your comments