டாட்டா ஏஐஏ சார்பில் ஆயுள் காப்பீட்டின் அவசியம் குறித்து சங்கல்ப் யாத்திரை எனும் விழிப்புணர்வு பேரணி..!

கோவை ரேஸ்கோர் பகுதியில் மீடியா டவர் அருகே டாட்டா ஏஐஏ சார்பில் ஆயுள் காப்பீட்டின் அவசியம் குறித்து சங்கல்ப் யாத்திரை எனும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் டாடா ஏஐஏ லைஃப் தமிழ்நாடு ஏஜென்சி இயக்குனர் ராஜேஷ் குமார், கோவை கிளை இயக்குனர் நாகராஜ் தலைமை வகித்தனர். 



சிறப்பு விருந்தினர்களாக சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி,பி.பி.ஜி.தொழில்நுட்பக் கல்லூரியின் செயல் இயக்குநர் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி அமுத குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்வில் பேரணியில் பங்கேற்ற ஊழியர்களின் பதாகைகளில் சமூக கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் காப்பீடு முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வசனங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் காப்பீடு நன்மைகளைப் பற்றி தத்ரூபமாக நாடகமாக நடித்து காட்டினர்.




No comments

Thank you for your comments