08-01-2025ம் தேதி ராசி பலன்கள்



மேஷம் (Mesham)- Aries

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குறுகிய தூரப் பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். அரசு காரியத்தில் கவனம் வேண்டும். புதுமையான சிந்தனைகள் பிறக்கும். செயல்களை திட்டமிட்டு செயல்படவும். உறவினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பொறுமை வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : மாற்றமான நாள்.

பரணி : சிந்தனைகள் பிறக்கும்.

கிருத்திகை : புரிதல் மேம்படும்.

 

 

ரிஷபம் (Rishabam) -Taurus

நினைத்த சில பணிகள் தாமதமாக நிறைவேறும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிராக செயல்பட்டவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். சந்தேக எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. உலகத்தைப் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். திடீர் பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

கிருத்திகை : வாதங்கள் மறையும்.

ரோகிணி : நெருக்கடிகள் குறையும்.

மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.

 


மிதுனம் (Mithunam) -Gemini

நீண்ட நாள் வைப்பு திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் உருவாகும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பழக்க, வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பெருந்தன்மையுடன் செயல்பட்டு பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். போட்டி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : சுறுசுறுப்பான நாள்.

திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும்.

புனர்பூசம் : குழப்பங்கள் குறையும்.

 

 


கடகம் (Kadagam) - Cancer 

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மறதிகள் விலகும். மனதில் எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். புதிய முயற்சியால் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபிட்சம் ஏற்படும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். அச்சம் விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : மறதிகள் விலகும்.

பூசம் : அனுபவம் உண்டாகும்.

ஆயில்யம் : மாற்றமான நாள்.

 

 


சிம்மம் (Simmam) -Leo 

புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைக்கவும். திடீரென புதிய முடிவுகளை எடுப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : உதவிகள் கிடைக்கும்.

பூரம் : புதுமையான நாள்.

உத்திரம் : முடிவுகள் பிறக்கும்.

 

 


கன்னி (Kanni)- Virgo 

எளிதில் முடிய வேண்டிய சில காரியங்கள் தாமதமாகி நிறைவு பெறும். புதுமையான சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

உத்திரம் :  குழப்பமான நாள்.

அஸ்தம் : சிந்தித்துச் செயல்படவும்.

சித்திரை : பொறுமை வேண்டும்.

 

 

 


துலாம் (Thulaam)- Libra 

புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். இழுபறியான விஷயங்களுக்கு திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். போட்டிகளில் அனுபவம் வெளிப்படும். கணவன், மனைவியிடையே புரிதல் அதிகரிக்கும். வழக்குப் பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் புதிய அறிமுகம் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

சுவாதி : அனுபவம் வெளிப்படும்.

விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.

 

 


விருச்சிகம் (Viruchigam) -Scorpio

மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை யோசிப்பீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் அமையும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விவேகமான செயல்பாடுகள் நன்மையை உருவாக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் :  பச்சை நிறம்

விசாகம் :  குழப்பங்கள் குறையும்.

அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.

கேட்டை :  நன்மையான நாள்.

 

 


தனுசு (Dhanusu)- Sagittarius

வருமான முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் புதிய தொடர்பும், அறிமுகமும் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.

பூராடம் : விட்டுக்கொடுத்து செயல்படவும்.

உத்திராடம் : அறிமுகம் உண்டாகும்.

 

 

 


மகரம் (Magaram)- Capricorn

உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டில் தேவைகளை அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் உருவாகும். பெரியோர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளுக்கு தெளிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் விலகும். உற்சாகம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

திருவோணம் : வாய்ப்புகள் உருவாகும்.

அவிட்டம் : தெளிவுகள் கிடைக்கும்.

 

 

 


கும்பம் (Kumbam)- Aquarius

நவீன தொழில் நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். வியாபாரத்தில் தவறிய சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : ஒப்பந்தங்கள்  சாதகமாகும்.

சதயம் : தீர்வுகள் கிடைக்கும்.

பூரட்டாதி : நன்மையான நாள்.

 

 

 



மீனம் (Meenam) - Pisces

கணவன், மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். நிதானமான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களால் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களின் வருகை ஏற்படும். திடீர் மாற்றங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.

உத்திரட்டாதி :  ஒத்துழைப்புகள் ஏற்படும்.

ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

 

No comments

Thank you for your comments