பெண்களின் முன்னேற்றம் குறித்து ஸ்ரீ ஆஷ்ரிதா ஜி வகுப்புகள் நடைபெற்றது!
கோவை தெலுங்குபாளையம் பிரிவுள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்த்ரி சக்தி வரம் என்ற தலைப்பில் பெண்களுக்குள் புதைந்திருக்கும் திறமைகளை எவ்வாறு வெளிப்படுத்துதல்,தலைமை பண்பு ஏற்று நடத்துதல்,ஐஸ்வர்ய அபிவிருத்தி மற்றும் குடும்ப நலன் மேம்பாடு, பெண்களின் முன்னேற்றம் குறித்து ஸ்ரீ ஆஷ்ரிதா ஜி வகுப்புகளை நடத்தினார்.
இந்நிகழ்ச்சியின்,சிறப்பம்சங்கள் பெண்களுக்குள் புதைந்திருக்கும் திறமைகள் எவ்வாறு வெளிப்படுத்துதல், தலைமை பண்பு ஏற்று நடத்துதல், ஐஸ்வர்ய அபிவிருத்தி,மற்றும் குடும்ப நலன் மேம்படுத்துதல்,அன்பு மற்றும் நீண்ட ஆயுள்,பெண்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறன்,பெண்கள் தங்கள் பணிபுரியும் இடங்களில் சாதனையாளராக திகழ்வது என்பது குறித்து,சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பெண்களுக்கு புத்துணர்ச்சி அளித்து சிறப்புரையாற்றினார்.மேலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற கோவையின் முக்கிய பிரமுகர்களான சவுத் இந்தியன் புல்லியன் அசோசியேஷன் பிரசிடெண்ட் சுரபி கார்த்திக்,சிசிடிஏ செயலாளரும் ஸ்ரீ கல்கி ஜுவல்லர்ஸ் நிறுவனர்,ஷியாம் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளுக்கு பங்கு அளித்தனர்.
உடன் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா,அனுபவ் குரூப்ஸ் ரஞ்சனி ரவி,வாசவி மித்ரா மஹால் சேர்மன் கண்ணன் துளசி,கோவை மாவட்ட மாற்றுத்திறனாளி மகளிர் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜெயபிரபா,அறம் செய்வோம் அறக்கட்டளையின் நிறுவனர் கவிதா, கோவை சிறப்பு மக்கள் அறக்கட்டளையின் நிறுவனர் ஜமுனா ராணி,மற்றும் கோவையின் பல முக்கிய பிரமுகர்களும்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments