Breaking News

தமிழக ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் ஆர்பாட்டம்

காஞ்சியில் தமிழக ஆளுநரை கண்டித்து  காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


சட்டசபை உரை புறக்கணிப்பு

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். அப்போது தேசிய கீதத்தை முதலில் பாட வில்லை என்று குற்றம்சாட்டி சட்டசபையில் இருந்து வெளியேறினார். 

மேலும் ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட சமூக வலைதள பதிவில் சட்டசபை நடவடிக்கைகள் அவசர காலத்தை நினைவூட்டுவதாகவும் விமர்சித்து இருந்தார்.  இதற்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழகத்தின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழக மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன்,மேயர் மகாலட்சுமி யுவராஜ், இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், ஒன்றிய செயலாளர்கள்,தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள்,பகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள்,திமுக நிர்வாகிகள் என 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாட்டை விட்டு ஆளுநரை வெளியேறுமாறு,பதவி விலக கோரியும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

No comments

Thank you for your comments