Breaking News

தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை!



கோவை பெரிய கடை வீதியில் மணி கூண்டு கீழ் செயல்பட்டு வரும் பூம்புகாரில் "தீபத் திருவிழா"என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது.



பூம்புகார் என்ற பெயரால் அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருவதைப் போல இந்த ஆண்டும் கார்த்திக்கை தீபத்தை முன்னிட்டு"தீபத் திருவிழா"என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை 01.12.2024 முதல் 31.12.2024 முடிய கோவை பெரிய கடை வீதியில் மணி கூண்டு கீழ் செயல்பட்டு வரும் பூம்புகாரில் நடைபெற உள்ளது இக்கண்காட்சியினை SSVM கல்வி குழுமம் நிறுவனர் & நிர்வாக அறங்காவலர் Dr.மணிமேகலை மோகன் இவ்விழாவை துவக்கி வைத்தார் கண்காட்சியை குறித்து மேலாளர் மாலதி கூறுகையில் இக்கண்காட்சியில் பித்தளையில் செய்த விநாயகர் விளக்கு ,பிரதோஷ விளக்கு அஷ்டலட்சுமி விளக்கு, கஜலட்சுமி விளக்கு, பாலாஜி விளக்கு. விஷ்னு விளக்கு. மூகாம்பிகை விளக்கு. அருணாச்சலேஸ்வர் விளக்கு, ரங்கநாதர் விளக்கு. சங்கு சக் விளக்கு, சிறிய அகல் விளக்கு, அஸ்தோத்ரம் விளக்கு காமாட்சி விளக்கு, காஞ்சி காமாட்சி விளக்கு, தாமரை பூ மாடல் விளக்கு, அன்னம் தொங்கு விளக்கு, யானை விளக்கு, விநாயகர் நின்ற நிலை விளக்கு,வாத்து மாடல் நந்தா விளக்கு, முருகன் அறுபடை விளக்கு, முருகன் விளக்கு, பித்தளை சிம்னி விளக்கு, 1 அடி முதல் 6 அடி அன்னம். பிரபை விளக்கு, மலபார் விளக்கு. கிளி தொங்கு விளக்கு, குபேர விளக்கு, நந்தா விளக்கு, பேன்சி கேரளாவிளக்கு, பாலாடை விளக்கு, மூலிகையில் செய்த சங்கு விளக்கு, பஞ்ச காவிய விளக்கு, மண்ணால் செய்த விநாயகர் விளக்கு, உருளி விளக்கு. தாமரை விளக்கு. கலர் மண் விளக்கு, பீங்கான் விளக்கு. எண்ணற்ற விளக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து விளக்குகளுக்கும் 10 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமின்றி ஏற்றுக் கொள்ளப்படும்.இக்கண்காட்சி மூலம் ரூபாய் 10.00 இலட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.



இக்கண்காட்சியில் விற்பனைக்கு உள்ள கைவினைப் பொருட்களை கோவை மாநகர மக்கள் வாங்கி பயன் பெறுவதுடன் இக்கலைப் பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவுவதாக கூறினார்.

No comments

Thank you for your comments