தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பனைவிதைகள் நடும் நிகழ்வு
காஞ்சிபுரம், டிச.3-
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 12.000 பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் பனை விதைகள் நடும் நிகழ்வை தொடக்கி வைத்தார்.
தோட்டக்கலைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் அமுதா பேசுகையில்,
பனைமரத்திலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் மிகவும் பயனுள்ளது. எனவே அவற்றை அதிக அளவில் நடுதல் வேண்டும் என்றார். ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் தாங்களாக முன்வந்து பனைவிதைகளை நடவு செய்யும் பணியில் தன்னார்வத்துடன் ஈடுபட்டனர்.
தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு 4 குறுங்காடுகள் ஊராட்சி சார்பில் உருவாக்கி பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments