Breaking News

எல்.ஐ.சி முகவர்கள் சங்கத்தினர் மாபெரும் அறவழிப் போராட்டம்!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எல்ஐசி லியாஃபி முகவர்கள் சங்கத்தின் சார்பில் அறவழிப் போராட்டம் கோவை கோட்டத்தலைவர் கோ.வெ. குமுணன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் போனஸை உயர்த்த வேண்டும் பாலிசி மீதான கடன் வட்டியை குறைக்க வேண்டும் பழைய கமிஷன் முறையை தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் எல்ஐசி நிர்வாகத்திற்கு எதிராகவும் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து நிர்வாகிகள் தெரிவிக்கையில் நிர்வாகத்துடன்  சார்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்றதால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் மேற்கு மண்டலம் கோவை,ஈரோடு, திருப்பூர்,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் வாடிக்கையாளர்களுக்கு பிரச்சினைகள் வரும்போது முகவர்கள் தான் அதனை நிவர்த்தி செய்கின்றனர்.

எனவே ஆன்லைன் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர் மேலும் LIC நிர்வாகம் மற்றும் மத்திய அரசு உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.கோரிக்கைகள் நிறைவேறும் வரை பலகட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் லியாஃபி தென்மண்டல தலைவர் சுப்பிரமணியம்  சிறப்புரையாற்றினார் போராட்ட விளக்க உரை குறித்து கோவை கோட்டத்தின் செயலாளர் ராமசாமி பேசினார்.

லியாஃபி அகில இந்திய செயற்குழு உறுப்பினர் எம்.என் முருகானந்தம், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு இணைச்செயலாளர் சுரேஷ்,கோவை கோட்ட துணைத் தலைவர் ராமசாமி மற்றும் கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 26 கிளைகளின் தலைவர்,செயலாளர், பொருளாளர் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் முகவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  முகவர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments