Breaking News

கொங்கு உணவு திருவிழா மற்றும் கண்காட்சியில் தள்ளு முள்ளு..! - சலசலப்பு

கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் 2 நாட்கள் “கொங்கு உணவு திருவிழா மற்றும் கண்காட்சி" நடைபெறுகிறது. இதில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட சைவ அசைவ உணவுகள், இனிப்புகள், பழச்சாறுகள் என ஏராளமான உணவுகள் பரிமாறப்பட்டன.

இவ்விழாவில்  பங்கேற்ற  பொதுமக்கள் 800 ரூபாய்  கொடுத்து வாங்கிய டோக்கன் கோவில் அன்னதானத்தில் நின்று கூட்டம் கூட்டமாக  உணவு  வாங்க வேண்டிய அவலம்  மேலும் பொதுமக்கள் வரிசையில் நின்று தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிலருக்கு 800 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கியும் உணவு உண்ணாமல் சென்றனர்.

உணவு வாங்க முடியாமல்  சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்  மேலும் சில பொதுமக்கள்  உணவின் தரம் சரியில்லை என கூறி சிலர் ரகளையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் பரவுகின்றன இதனால் உணவுத் திருவிழாவில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது .





No comments

Thank you for your comments