ஃபெஞ்சல் புயல் நிவாரண முகாமில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் எம்.எல்.ஏ க.சுந்தர்
ஃபெஞ்சல் புயல் காரணமாக ஆதவப்பாக்கம் மற்றும் கருவேப்பம்பூண்டி ஆகிய கிராமங்களில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 150க்கும் மேற்பட்ட இருளர் இன மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்களான பாய், போர்வை, பிரெட், பிஸ்கட் மற்றும் உணவுகளை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் வழங்கி தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர்,இருளர் இன மக்களுக்காக நடைபெறும் மருத்துவ முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரி வள்ளல், பேரூராட்சி மன்றத் தலைவர் சசிகுமார், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் இளமதி கோவிந்தராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments