பக்கவாதம் நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்!
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி கலந்து கொண்டு மாரத்தானை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியை தொடர்ந்து மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறியதாவது கோவையில் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக இதுபோன்ற மாரத்தான்கள் நடத்துவதாகவும், பக்கவாத தொடர்பான நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை விரைவாகவும் முன்கூட்டியே எடுத்தால் பக்கவாதத்தால் ஏற்படக்கூடிய பெரும்பாலான பின் விளைவுகளைத் தவிர்த்துவிடலாம் என்று கூறினார்.
18 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்ற மாரத்தான் கோவில் பாளையம் கே.எம்.சி.எச் மருத்துவமனை முன்பாக துவங்கி அவினாசி சாலை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் நிறைவு பெற்றது குறிப்பிடதக்கது மாராத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கே.எம்.சி.எச்.மருத்துவ மனையின் துணை தலைவர் தவமணி தேவி பழனிசாமி,நிர்வாக இயக்குனர் அருண் பழனிசாமி,பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றவர்கள்,மருத்துவர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், செவிலியர்கள்,மாணவர்கள் உட்பட நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்,



No comments
Thank you for your comments