Breaking News

கோவையில் தி சாம்பியன் நிகழ்ச்சி!

கோவை மாவட்டம்  வெங்கடலட்சுமி கல்யாண மண்டபத் தில் ஸ்ரீ பரம்ஜோதி தி சாம்பியன் என்கின்ற ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் 700க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். சென்னை நேமத்தில் உள்ள பரஞ்ஜோதி ஆலயத்தின் சீடர் யோகநாதன் ஜி இந்நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.


நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் கூறியதாவது :-

இளைஞர்களுக்கு தலைமைத்துவம் வெற்றி படைப்பாற்றல் பேரின்பம் மிகவும் முக்கியமானவைகள் ஒரு வெற்றிகரமான தலைவனாக மாறுவதற்கு தேவையான நான்கு அடிப்படை பண்புகள் வளர்ப்பதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் நான்கு முக்கிய பண்புகளின் பலன்கள் அரசன் ஆளுமை (உயர்நோக்கம்,ஆற்றல், முடிவெடுத்தல், தெளிவு,புத்திசாலித்தனம் மலர்தல் )போர் வீரன் ஆளுமை(தைரியம் ஒழுக்கம்,கவனம், ஆரோக்கியம், ஐஸ்வர்யம்) மெஜிசியன் ஆளுமை (உயர்சிந்தனை, வெற்றி, வாழ்க்கை துணை,சவால்களை எதிர்கொள்ள மாற்றத்தை உருவாக்கும் திறன்) மகிழ்ச்சி ஆளுமை (அமைதி, உணர்ச்சி சமநிலை, உறவுமுறை, விழிப்புணர்வு,அறிவொளி கடவுளை உணர்தல் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் தலைமுறையினர் அனைவரும் ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சி அடைந்தனர் நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை கோவை பரம்ஜோதி பக்தர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடதக்கது

No comments

Thank you for your comments