Breaking News

மின் வாரிய தொழிலாளர்களை கவனிக்காமல் விட்டால் திமுக ஆட்சிக்கு பின்னடைவு - முன்னாள் எம்.எல்.ஏ மனோகரன் பேட்டி

 காஞ்சிபுரம் :




தமிழ்நாடு நேஷனல் எலக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் பெடரேஷனின் மாநில செயற்குழு கூட்டமானது காஞ்சிபுரம் காந்தி ரோடில் உள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மனோகரன்  தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவர் சுகுமார் முன்னிலை வகித்தார்.வேலூர் மண்டல செயலாளர் சுரேஷ்பாபு வரவேற்புறையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் சுவர்ணராசு சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்த செயற் குழு கூட்டத்தில்,

தமிழ்நாடு மின்வாரியம் 3 மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சட்டபூர்வமாக பதிவு செய்யாத நிலையில் மின்சார சட்ட மசோதா 2023ஐ கைவிடவும், பொதுத்துறை நிறுவனமாக தொடர்ந்து செயல்படவும்,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள களப்பணிகளில் தேவையான பணியாளர்கள் மிக குறைவாக உள்ளதால் போதுமான புதிய பணியாளர்களை தேர்வு செய்திடவும்,

மின் ஊழியர்கள் பணிகாலத்தில் இறந்துவிடும் பணியாளரின் வாரிசுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் நடைமுறையில் பல்வேறு சலுகைகள் வழங்கி ,தமிழக அரசின் ஆணை எண். 33 Labour and skill development (91)D1 08-02-2023 ன் படி  மின்வாரியத்தில் நடைமுறைபடுத்திட மின் கழக தலைவர் உத்தரவு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் என மொத்தம் 17தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த செயற்குழு கூட்டத்தில் சங்கத்தின் பல்வேறு பொறுப்பு நிலையில் உள்ள முக்கிய நிர்வாகிகள்,செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நேஷனல் எலக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் பெடரேஷனின்  மாநிலத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மனோகரன் தெரிவிக்கையில்,

பல்வேறு பேரிடர் காலங்களில் முன் களப் பணியாற்றி இந்த ஆட்சியின் பெருமையை  காப்பாற்றி கொண்டிருக்கும் மின் வாரிய தொழிலாளர்களை இந்த ஆட்சியாளர்கள் நன்கு கவனிக்க வேண்டும்,அவர்களை கவனிக்காமல் விட்டால்,மின் வாரிய தொழிலாளர்களிடையே தோய்வு வந்து அது தமிழக வளர்ச்சிக்கு எந்த விதமான முன்னேற்றமும் இருக்காது, திமுக ஆட்சிக்கு பின்னடைவு தான் ஏற்படும் என்றும்,மின் வாரியம் பொதுத் துறையில் இருந்தால் மட்டுமே இந்த நாடு முன்னேறும்,தமிழ் நாடு முன்னேற முடியும் என்றும்,மின் வாரிய தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது,அதன் மூலமாக இந்த அரசை தன்னை காப்பாற்றிக் கொள்ளும் என தெரிவித்தார்.


 

No comments

Thank you for your comments