காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு கூட்டம்
காஞ்சிபுரம், டிச.22:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் அதன் மாவட்ட தலைவர் அக்ரம் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் அஷரப் அலி, மாவட்ட பொருளாளர் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம்,மாநில செயலாளர் முஹஸின் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார்கள்.
பின்னர் இக்கூட்டத்தில் மனித நேய பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்கள்.
கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்களை கண்டிப்பது, வக்பு வாரிய சட்டத்தின் 44 திருத்தங்களை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்துவது,
இன அழிப்பை செய்யும் இஸ்ரேலுக்கு எதிரான பன்னாட்டு அரசியல் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும், நபிகள் நாயகத்தின் சிறப்பு மிக்க வரலாற்றை மக்களுக்கு விளக்கும் வகையில் 10 மாத கால தொடர் சொற்பொழிவு பிரச்சாரங்களில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் பொதுக்குழு கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments