பாஜகவினர் நாராயணசாமி நாயுடுவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்!
முதன்முதலாக விவசாயிகள் சங்கத்தை தோற்றுவித்து தமிழக விவசாயிகளின் உரிமைக்காக போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 40 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை வையம் பாளையத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசியல் கட்சிகளான திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசாயல் கட்சியினர் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு விவசாயசங்ககள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் பாஜக வினர் நாராயணசாமி நாயுடுவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பாஜக மாவட்ட துணை தலைவர் செந்தூர் முருகேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய அணி மாவட்ட துணைத்தலைவர் பாண்டியன், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் மேகலதா, எஸ்எஸ்குளம் ஒன்றிய அமைப்பாளர் கார்த்தி , மண்டல் பொருளாளர் ரவிக்குமார் மாவட்ட செயலாளர் ஜி எஸ் செல்வராஜ் மாவட்ட பொதுச் செயலாளர் விவசாய அணி ஜெயசேகர் விவசாய அணி மாவட்ட பொருளாளர் கவியரசு விவசாய அணி மாவட்ட துணைத் தலைவர்கள் அரவிந்த், விவேக், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராகவன், விவசாய அணி மண்டல் தலைவர் நடராஜ், கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்ராஜ், கள்ளி பாளையம் கிளைத் தலைவர் நடராஜ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments