இறுதியாண்டு மாணவர்களுக்கு மலேசியா,மொரீசியஸ் நாடுகளில் பயிற்சி மாணவர்களுக்கு இன்பதிர்ச்சியளித்த இன்ஸ்டியூட் நிர்வாகம்!
கோவை அமிர்தா இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு மலேசியா,மொரீசியஸ் நாடுகளில் பயிற்சி மாணவர்களுக்கு இன்பதிர்ச்சியளித்த இன்ஸ்டியூட் நிர்வாகம்.
கோவை மாவட்டம் தடாகம் சாலை அமிர்தா இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டு இறுதியாண்டு மாணவர்கள் சார்பில் நடைபெற்ற கிராமிய விருந்து விழா நடைபெற்றது கே.என்ஜி புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமிர்தா இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சார்பாக நடைபெற்ற கிராமிய விருந்து விழா தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார், துணை முதல்வர் செஃப் சத்தியா நந்தன் , தலைமை அலுவலக நிர்வாக அதிகாரி புவனேஷ்வரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமை செஃப் கீயாஸ் கிச்சன் மால்குடி கவிதா,ராடிசன் ப்ளூ தலைமை செஃப் மணிகண்டன், ஐடிசி தலைமை செஃப் எம்.எஸ்.கபில், ஸ்டாண்டப் நகைச்சுவை நடிகர் நேசன் டேவிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மூன்றாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தனர்.நிகழ்ச்சியின் இறுதியில் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் மாணவ மாணவியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிராமிய விருந்து எனும் இந்திய பாரம்பரிய கிராமப்புற உணவுகளான பானகம், முடக்கத்தான் கீரை சூப், கோபி 65, கோவை வெள்ளை பிரிமாணி, வெள்ளை சாதம், திண்டுகல் பிரியாணி, மதுரை கறி தோசை, கப்பு கோம் உக்கதா. கத்திரிக்காய் கொல்து, நாட்டுக்கோழி சிந்தாமணி, அக்கார வடில், ரைத்தா, தயிர், வெற்றிலை பாயாசம், சித்தரத்தை பால் மற்றும் தக்காளி ரசம் உள்ளிட்ட பதினாறு வகையான உணவுகளை சமைத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கினார்கள்.இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் கூறுகையில் இறுதி ஆண்டு பயிழும்மாணவர்களுக்கு ஆறுமாத கால பயிற்சிக்கு மலேசியா, மொரிஷியஸ் போன்ற வெளி நாடுகளுக்கும் மற்றும் வட இந்திய மாநிலங்களுக்கும் மாணவர்கள் செல்கின்றனர் . எனவே அவர்களுக்கு நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments
Thank you for your comments