Breaking News

காஞ்சிபுரத்தில் கருணீகர் குல மாநாடு

காஞ்சிபுரம், ஜன.23-

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருணீகர் குலத்தின் எழுச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு கருணீகர் குலத்தின் 7 வது மாநாடு காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதன் மாநில தலைவர் எம்.ஜே.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளர் முத்து சுப்பிரமணியன்,மாநில பொருளாளர் வெ.சீனிவாசன், அமைப்பு செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில இணைச் செயலாளர் ஆர்.வி.ஏ.சிவகுரு வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் இதயநோய் நிபுணர் மகுடமுடிகலந்து கொண்டு இதயநோய் வருவதற்கான காரணங்கள்,அதை குணமாக்கும் வழிமுறைகள் குறித்து குறும்படம் மூலமாக விளக்கி பேசினார்.

கருணீகர் குலத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், கல்வி, தொழில், பொருளாதாரம்,பண்பாடு ஆகிய துறைகளில் கருணீகர் சமூகம் வளர்ச்சி காண உதவி செய்தல், பிற மாநிலங்களில் உள்ள கருணீகர் சங்கத்தினரோடு இணைந்து செயலாற்ற முயற்சி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில் மாநாட்டு மலர் வெளியிடப்பட்டதுடன் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். முன்னதாக வள்ளலாரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு அனைவரும் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

No comments

Thank you for your comments