Breaking News

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம், டிச.16:

காஞ்சிபுரம் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் கலையரங்கில் 18 வது ஆண்டு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் காரப்பேட்டையில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ஒரு அங்கமான மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு அக்கல்லூரியின் வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து வரவேற்று பேசினார்.கல்லூரியின் கௌரவ வேந்தர் கோமதி ராதாகிருஷ்ணன், இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் வி.மோகன் மருத்துவ மாணவர்களில் 705 இளங்கலை பட்டங்களும், 103 முதுகலைப் பட்டங்களும், 24 முனைவர் பட்டங்களையும் வழங்கி பேசுகையில் மாணவர்கள் சேவை மனப்பான்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


கல்லூரியின் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தனது உரையில் தரமான கல்வி தரக்கூடிய விதங்களையும்,துணை வேந்தர் சி.ஸ்ரீதர் நிறுவனத்தின் வெற்றிகள்,ஆராய்ச்சி முன்னேற்றங்கள்,மாணவர் நலன் செயல் திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார்கள்.

விழாவில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் சுரேஷ்பாபுவுக்கு சிறந்த மருத்துவர் விருதும்,கல்லூரியில் படிப்பில் தனித்துவமாக செயல்பட்ட 76 மாணவர்களுக்கு சிறந்த மாணர் விருதுகளும் வழங்கப்பட்டன.மாணவி ஹரிதா குமாரி 11 பதக்கங்கள் பெற்று சாதனை மாணவி என்ற விருதினை பெற்றார்.

கல்லூரியில் பயின்ற 8 சிறந்த பழைய மாணவர்களுக்கு கோமதி ராதாகிருஷ்ணன் என்ற மிகச்சிறந்த பழைய மாணவர் விருதும் வழங்கப்பட்டது.

சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்த அதன் தலைவர் மருத்துவர் வி.மோகனுக்கு, ரூ.10லட்சமும், கோயம்புத்தூர் சமூக சேவகியான இட்லிப்பாட்டி கமலாத்தாளுக்கு ரூ.2 லட்சமும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

விழாவில் கல்லூரி முதல்வர் ராஜசேகர் உட்பட மருத்துவக்கல்லூரி பேராசியர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments