Breaking News

ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட்யின் 23ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி விழா!

கோவையில் பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பாக 23 ஆம் ஆண்டு  புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐயப்பன் சுவாமிக்கு ரோஜா,மல்லி,தாமரை உள்ளிட்ட 18 வகையான  மலர்களால் புஷ்பாஞ்சலி செய்தனர்.



கோவை வடவள்ளி தில்லை நகர் பகுதியில் கடந்த 23 ஆண்டுகளாக பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி விழா மிக பிரம்மாண்ட மா கவும் வெகு விமரிசையாகவும்  நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து  23வது ஆண்டாக ஐயப்ப சுவாமிக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி விழாவில்   கணபதி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேர ஹோமம், சுதர்சன மற்றும் நவக்ரஹ ஹோமங்களுடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 



இதனைத்தொடர்ந்து மாலை ஸ்ரீ விட்டல் சத்திய நாராயணன் தலைமையில் ஸ்ரீ ஏக்நாத் பஜன் மண்டலி  குழுவினர் ஐயப்பன் சுவாமியை துதித்தும் ஐயப்பனை போற்றியும் பஜனையுடன் கூடிய பாடல்களை பாடி அசத்தினார்கள். இதனை கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பக்தி பரவசத்தில் ஆடி பாடி மகிழ்ந்தனர்.



அதனைத்தொடர்ந்து ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் நிறுவன தலைவர் Dr எஸ்.ராமநாதன் தலைமையில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கேரள மாநிலம் சபரிமலையில் 18 படிக்கட்டுகளை கடந்து  ஐயப்பன் சுவாமி  பக்தர்களுக்கு காட்சியளிப்பது போல் இங்கும் 18 படிக்கட்டுகள் அமைத்து ஐயப்பன் சுவாமி காட்சியளிப்பது போல் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது மேலும் ஒவ்வொரு படிக்கட்டிற்கும் தாமரை,ரோஜா,மல்லி, சாமந்தி,என 18 வகையான மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.இந்த புஷ்பாஞ்சலி விழாவில் பந்தலகுமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் தலைவர்  ராஜா வாத்தியார்,செயலாளர் Dr.S.ராமநாதன் வாத்யார், பொருளாளர் மணி ஸ்ரீ வாத்யார் மற்றும் உறுப்பினர்கள் சத்யா ஸ்ரீராம் விவேக் மகேஷ் மற்றும் அகில பாரத மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாபு பரமேஸ்வரன் பக்தர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments

Thank you for your comments