வையாவூரில் ரெப்கோ வங்கி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
காஞ்சிபுரம்,டிச.16:
ரெப்கோ வங்கி 56 வது ஆண்டு நிறுவன நாள் விழாவையொட்டி காஞ்சிபுரம் அருகே வையாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.வங்கியின் காஞ்சிபுரம் கிளை மேலாளர் எம்.இளையராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.இதன் பின்னர் அவர் பேசுகையில் வங்கியின் 56 வது ஆண்டு நிறுவன நாளையொட்டி ரெப்கோ வங்கி தலைமை அலுவலகம் 56 ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது.
இதனையொட்டி புதிய இட்டுவைப்புத் திட்டமாக ரெப்கோ 56 அறிமுகப்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் மூத்த குடிமக்கள் செய்யும் இட்டு வைப்புகளுக்கு 8.75 சதவிகிதமும்,மற்றவர்களுக்கு 8.25 சதவிகிதமும் 560 நாட்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.நிகழ்வில் வங்கி ஊழியர்கள்,பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
No comments
Thank you for your comments