அரசுரீதியிலான அங்கீகாரம் பெற உத்யம் பதிவுச்சான்றிதழ் - ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி அறிவுறுத்தல்
வேலூர் மாவட்டத்தில் உத்யம் பதிவுச்சான்றிதழ் பெறாத குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இப்பதிவின் தேவை மற்றம் பதிவினால் பெறத்தக்க பயன்களை அறிந்து உத்யம் பதிவுச்சான்றிதழ் பெறவேண்டுமேன மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, 2020ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையின்படி குறு, சிறு மற்று ம்நடுத்தர தொழில் நிறுவனங்கள் அவற்றின் இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை வருவாய் ஆகிய இரட்டை அளவு கோலின்படி வகைப்படுத்தப்படுகின்றன.
இந்நிறுவனங்கள் உத்யம் பதிவுச்சான்றிதழ் பெறுவதன் மூலம் தம் நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்துகொள்ளலாம். உத்யம் பதிவு செய்வது இணைய வழியாக, மிக எளிய செயல்முறைகளை கொண்ட கட்டணமில்லா செயல்முறையாகும்.
ஆதார், அதனுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண், பான்கார்டு மற்றும் வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள் இருந்தால் தமது உற்பத்தி வாணிக அல்லது சேவை தொழில் நிறுவனத்துக்கு அரசுரீதியிலான அங்கீகாரம் பெற விரும்பும் எவரும் udyamregistration.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மிகஎளிதாக உத்யம் பதிவுச்சான்றிதழ் பெறலாம்.
மாவட்ட தொழில்மையங்கள் உத்யம் பதிவு செய்வது குறித்து விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதோடு தேவைபடுவோருக்கு உத்யம் பதிவுச்சான்றிதழ் இணைய வழிபெய ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் வழங்குகின்றன.
இதுதவிர வங்கிகளும் Udyam Assisted Filing முறைமூலம் உத்யம் பதிவுச்சான்றிதழ் பெற உதவுகின்றன.
உத்யம் பதிவு கட்டாயம் இல்லை எனினும் அதனால் கிடைக்கும் பயன்கள் அதிகம். மத்திய, மாநிலஅரசுகள் வழங்கும் சலுகைகள், உதவிகளை பெறவும் அவை செயல்படுத்தும் திட்டங்களின்கீழ் பயன்பெறவும் உத்யம் பதிவுச்சான்றிதழ்கள் அவசியமாகிறது. அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் டெண்டர்களில் குறு மற்றும் சிறு தொழில்நிறுவனங்கள் EMD (Earnest Money Deposit) இருந்து விலக்கு பெற உத்யம் சான்றிதழை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் நிலுவைத் தொகைகளை உரிய காலக்கெடுவுக்குள் வழங்காமை குறித்த வழக்குகளை பதிவு செய்யவும், விற்பனைத்தொகை குறித்தகாலத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான TReDS தளத்தில் பதிவு செய்யவும் உத்யம் பதிவுச்சான்றிதழ் அவசியமாகிறது. இந்திய ரிசர்வ் வங்கி விதிகளின்படி, முன்னுரிமை பிரிவு கடன் முறையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயந்திர தள வாட முதலீட்டுக்கான பருவ காலகடன் பெறவும் நடைமுறை மூலதனத்துக்கான கடன் பெறவும் உத்யம் பதிவு அத்தியாவசியமாகிறது.
இதுவரை உத்யம் பதிவுச்சான்றிதழ் பெறாத குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இப்பதிவின் தேவை மற்றம் பதிவினால் பெறத்தக்க பயன்களை அறிந்து உத்யம் பதிவுச்சான்றிதழ் பெற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு
பொதுமேலாளர்,
மாவட்ட தொழில்மையம்,
காங்கேயநல்லூர் சாலை,
காந்திநகர், வேலூர் - 06
அவர்களை நேரிலோ அல்லது 0416-2242512, 2242413 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புவெட்சுமி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments