காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சங்கராசாரியார் சுவாமிகள் தரிசனம்
காஞ்சிபுரம், டிச.24-
காஞ்சி காமகோடி மடத்தின் 70 வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகா சக்தி பீடங்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோயிலுக்கு விஜயம் செய்தார். அவருக்கு ஆலயத்தின் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர், சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மணியக்காரர் சூரியநாராயணன் மற்றும் கோயில் ஸ்தானீகர்கள் மங்கல மேள வாத்தியங்களுடன் வரவேற்றனர்.
கோயிலில் மூலவருக்கு சிறப்பு புஜைகள் செய்து தரிசித்தார். இதனைத் தொடர்து காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கூடிய திருஉருவம் பொறிக்கப்பட்ட மாதாந்திர நாட்காட்டியை வெளியிட்டார்.
பின்னர் அதனை கோயில் நிர்வாகிகள், ஸ்தானீகர்கள், பணியாளர்களுக்கும் தந்து ஆசி வழங்கினார். முன்னதாக ஆலயத்தில் நடந்து வரும் பல்வேறு பணிகளையும் பார்வையிட்டார்.
சுவாமிகளின் வருகையையொட்டி மூலவர் காமாட்சி அம்மன் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
No comments
Thank you for your comments