முத்தியால்பேட்டையில் எம்ஜிஆர்.நினைவு தினம் அனுஷ்டிப்பு
காஞ்சிபுரம், டிச.24:
காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை ஊராட்சி மன்றம் அருகில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37 வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
வண்ணமலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் அணியின் தொண்டர்கள் மீட்புக் குழுவின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் முதலாவதாக மலர்தூவி, கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட துணைச் செயலாளர் சோமங்கலம் ரமேஷ், பொருளாளர் வஜ்ரவேலு, ஒன்றிய செயலாளர் முனிரத்னம், கோவிந்தராஜ், மாகறல் சசி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் அன்னதானத்தையும் தொடக்கி வைத்தார்.
No comments
Thank you for your comments