பி.டி.ஜி அறக்கட்டளை 20 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியது!
கோவை மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் அஞ்சஞ்சேரி போன்ற பகுதிகளில் கனமழை, வெள்ளத்தால் கிராம மக்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அன்றாட தேவைகளுக்கே மிகவும் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கோவையை சேர்ந்த பி.டி.ஜி அறக்கட்டளை தனது 2ம் கட்ட உதவிகளை மேற்கொண்டு, அஞ்சஞ்சேரி கிராமத்தில் 20 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியது. இந்த முயற்சியில், சமையல் பாத்திரங்கள், சமையல் எண்ணெய், 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
இது குறித்து அறக்கட்டளையின் நிர்வாகத்தினர் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சீராக மாற்றவும், அவர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த உதவிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான உதவிகள்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முழுமையாக சீராகும் வரை பி.டி.ஜி அறக்கட்டளை தொடர்ந்து தனது உதவிகளை செய்து அவர்களது வாழ்க்கை மேம்பட உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments