Breaking News

காஞ்சிபுரத்தில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்,டிச.19:

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலை பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக தெற்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷாவை கண்டித்து வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அம்பேத்கரை தரக்குறைவாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மாநகர திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும்,உத்தரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சட்ட மேதை அம்பேத்கரை தரக்குறைவாக பேசியதாக திமுகவினர் கண்டனக் கோஷங்களை எழுப்பினார்கள்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.யுவராஜ், மாவட்ட துணைத் தலைவர் வ.ஜெகன்னாதன்,காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் குமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், மாமன்ற பகுதி செயலாளர்கள்,உறுப்பினர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments