காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம், டிச.23:
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி தொடங்கி பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வந்து நிறைவு பெற்றது.
பேரணியை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். போதைத் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 280க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.
பேரணி தொடக்க விழாவில் காஞ்சிபுரம் எஸ்.பி.கே. சண்முகம்,மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,காஞ்சிபுரம் கலால் பிரிவு உதவி ஆணையர் அ.திருவாசகம் ஆகயோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணிய தொடங்கி வைத்த பின்னர் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டமாக நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 429 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு ஆட்சியர் அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
No comments
Thank you for your comments