Breaking News

காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆய்வு!

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 149 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா என்பதை குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது அவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ்சில் ஏறி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? அவ்வாறு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் பஸ் நிலையம் அருகே உள்ள காட்டூர் போலீஸ் நிலையம் சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு குற்ற சம்பவங்கள் தொடர்பான ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது போலீஸ் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், அசோக்குமார், உதவி கமிஷனர்கள் சேகர், கணேஷ், காட்டூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


இதுகுறித்து போலீசார் கூறும்போது, கோவையில் 149 தனியார் டவுன் பஸ்களும், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட வெளியூர் செல்லும் 107 தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

129 தனியார் டவுன் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் வெளியூர் செல்லும் 50 தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத தனியார் பஸ்களில் மூன்று நாட்களில் பொருத்தப்பட உள்ளதாக பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒவ்வொரு பஸ்களிலும் 5 முதல் 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றனர்.

No comments

Thank you for your comments