மகா சக்தி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அன்னையின் 7-ம் ஆண்டு விழா!
கோவை :
கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானத்தில் ஐம்பத்தி ஒரு சக்திபீட அலங்காரி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி கோவை இருகூர் பகுதியில் உள்ள காமாட்சி புரி ஆதினம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானத்தில் மகாசக்தி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அன்னையின் 7-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 51 வலம்புரி சங்காபிஷேகம், 51 கலச அபிஷேகம் மற்றும் உலக நலன் வேண்டி மகா அபிஷேகம் உள்ளீட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் காமாட்சி புரி ஆதினம் பஞ்சலிங்க சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையானது ஜன்டை மேளங்கள் மற்றும் கெட்டி மேளதாளத்துடன் சிறப்பு பூஜைகள் துவங்கியது சீடர்கள் பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் ஏராளமானோர் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்து அருள் பெற்றனர்
அம்பாளின் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றபோது பஞ்சலிங்க சாமிகள் பரவசநிலையடைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் முன்னதாக அம்மன் அலங்கார பூஜைகள் நடைபெற்றபோது பஞ்சலிங்க சுவாமிகள் அம்பாளை போற்றி பாடல்களை பாடி பக்தர்களை பரவசபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பஞ்சலிங்க சுவாமிகள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உபதேசங்கள் வழங்கினார் அப்போது அவர் பேசுகையில் இறைவனின் கையை பற்றிக் கொள்ளுங்கள் அப்போது அவர் எந்த சூழ்நிலையிலும் உங்களை கைவிடமாட்டார் என்று பேசினார் இறைவன் உங்கள் பிரார்த்தனைகளை கேட்க குருவை பின்தொடருங்கள் நீங்கள் தவறுகள் செய்தாலும் உங்களது குரு இறைவனிடம் பேசி உங்களை காப்பாற்றுவார் என்று கூறினார்.
இந்த சிறப்பு பூஜையில் கோவையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமான பொது மக்களுக்கு தனது கரங்களால் பிரசாதங்களை வழங்கி சிறப்பித்தார்.
No comments
Thank you for your comments