Breaking News

கோவை மதுக்கரை ஒன்றியம் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை  மதுக்கரை ஒன்றியம் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அரசியல் நிர்ணய சபை பற்றி மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் பற்றி மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.இதனைக் கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சரும்- கழகத் தலைவருமான ஸ்டாலின்  ஆணையின் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.



அதனைத்தொடர்ந்து கோவை மதுக்கரை ஒன்றியம் பாலத்துறை ஊராட்சியில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்- மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழிகாட்டுதலின் பேரில் கோவை தெற்குமாவட்ட கழக செயலாளர் தளபதிமுருகேசன் அவர்கள் வேண்டுகோளின்படி  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மதுக்கரை ஒன்றிய செயலாளர் விஜயசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்அபாட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். 



ஆர்பாட்டத்திற்கு மதுக்கரை ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.நந்தகோபால் ஒன்றிய பெருந்தலைவர் எம் ஆர் ஆர் பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் ராஜன்,  மதுக்கரை ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.ஆர்பாட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் மருதாச்சலம், பொருளாளர் ஞானபிரகாஷ்,தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழுதலைவர் செந்தில், அரிசி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், தேவராஜ், தண்டபாணி,பாபுலால், பாலத்துறை கிளை கழக நிர்வாகிகள் தமிழரசு கனகாசலம் சுரேஷ்பாபு ரங்கநாதன் மருதாச்சலம் மகளிர் அணியினர் பொன்மணி வாணி மேத்தா வினோத் மற்றும் மலுமிச்சம்பட்டி இளைஞர் அணி மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் , கிளைகழக நிர்வாகிகள் , மகளிரணியினர் , இளைஞரணியினர் கழக உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments