காஞ்சிபுரத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா
காஞ்சிபுரம், டிச.3-
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் முனபாக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். சங்கத்தின் சார்பில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பாக கேக் வெட்டி விழாவில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும்,பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி கலந்து கொண்டு பேசுகையில் கடந்த 1998 டிசம்பர் மாதம் 3 ஆம் தேதியிலிருந்து சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள்,கண்ணியம் மற்றும் அவர்களது நல்வாழ்வை மேம்படுத்திடவே சர்வதேச அளவில் மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
No comments
Thank you for your comments