ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் வெல்ஃபேர் மீட் ஷாப்யை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்!
கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நலன் கருதி, அவர்களுக்கு குறைவான விலையில் ஊட்டச்சத்துகள் மிக்க தரமான இறைச்சிகளை விற்பனை செய்யும் பொருட்டு,செல்ப்ரோ சிக்கன் நிறுவனத்தாருடன் இணைந்து,காவலர் நலன் இறைச்சிக் கடை(POLICE WELFARE MEAT SHOP)கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இது குறித்து தெரிவிக்கையில் காவலர்கள் நலன் கருதி ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக அமைக்கப் பட்டுள்ள இறைச்சிக் கடையில் பிராய்லர் கோழி,நாட்டுக்கோழி,காடை,முட்டை போன்ற இறைச்சி வகைகள் காவலர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட வுள்ளது என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கோவை மாநகர ஆயுதப்படை காவல் துணை ஆணையர் ராஜ் கண்ணா, செல்ப்ரோ சிக்கன் நிறுவனர் டாக்டர். C.R. செல்வக்குமார். செல்ப்ரோ சிக்கன் நிறுவனர் A. புஷ்பராஜ், மோட்டார் வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் K.கோவிந்தராஜூ, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் M. பெரியசாமி, இருபால காவல் ஆளிநர்களும் மற்றும் காவலர் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments