தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் கணவன் மனைவியிடம் ரூ.1.80 கோடி மோசடி - 2 பேர் கைது
திருவள்ளூர், டிச.4 -
சென்னை பெருங்களத்தூர், முத்துவேலர் 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் துளசிராமன் (வயது 40). இவரது மனைவி காயத்ரி (வயது 32) இவர்கள் இருவரும் சென்னையை அடுத்த பரனூரில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
ஆவடி பகுதியைச் சேர்ந்த தனஞ்செயன் (வயது 30)என்பவர், இதே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர் புதியதாக ஒரு நிறுவனத்தை துவங்கப் போவதாகக் துளசி ராமன் இவரது மனைவி காயத்ரி ஆகியோரிடம் கூறி உள்ளார்.
மேலும் தான் தொடங்க இருக்கும் நிறுவனத்திற்கு பணம் தேவைப்படுகிறது. பணம் கொடுத்து உதவி செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.
உடனே, கணவன் மனைவி இருவரும் அவரவர் வங்கி கணக்கில் இருந்து தலா ரூ 90 லட்சம் பணத்தை தனஞ்செயன் வங்கிக் கணக்கிற்கு 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் பல்வேறு தவணைகளாக அனுப்பி உள்ளனர்.
அதன் பிறகு தனஞ்செயன் தான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை.மேலும் பணத்தைக் கேட்டதம்பதியினரை தகாத வார்த்தைகளால் பேசி பணத்தை கொடுக்காமல் தனஞ்செயன் ஏமாற்றியுள்ளார்.
புகார்:
இது குறித்து காயத்ரி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பரணி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணை - கைது:
இந்த விசாரணையில் ஆவடி, பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த தனஞ்செயன் (வயது 30), இவரது நண்பர் சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் (வயது 28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
No comments
Thank you for your comments