Breaking News

05-12-2024 - வியாழன் - அன்றைய மேஷம் முதல் மீனம் வரையிலா ராசி பலன்கள்


05-12-2024 - கார்த்திகை 20 - வியாழக்கிழமை

திதி : பிற்பகல் 12.24 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி

நட்சத்திரம் : மாலை 05.27 வரை உத்திராடம் பின்பு திருவோணம்

அமிர்தாதி யோகம் : காலை 06.15 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்



சந்திராஷ்டம நட்சத்திரம் :  மாலை 05.27 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை

பண்டிகை :   திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் உற்சவம் ஆரம்பம் மற்றும் சிம்மாசனத்தில் பவனி.

வழிபாடு :  விநாயகரை வழிபாடு செய்து வர காரிய தடைகள் அகலும்.

விரதாதி விசேஷங்கள் : சதுர்த்தி,   திருவோணம்,  சுபமுகூர்த்த தினம்

உகந்த நாள் : 

  • சாந்தி பூஜைகள் செய்வதற்கு உகந்த நாள்.
  • அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற நாள்.
  • நந்தவனம் அமைப்பதற்கு நல்ல நாள்.
  •  கடன்களை அடைப்பதற்கு சிறந்த நாள். 



மேஷம் (Mesham)- Aries

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : தெளிவுகள் ஏற்படும்.

பரணி : ஒப்பந்தங்கள் கைகூடும்.

கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும்.

 

 

 

ரிஷபம் (Rishabam) -Taurus

வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூரப் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

கிருத்திகை : மந்தம் ஏற்படும்.

ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : ஆதாயம் கிடைக்கும்.

 


மிதுனம் (Mithunam) -Gemini

செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சி இன்மை ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.

திருவாதிரை : போராட்டங்கள் அதிகரிக்கும்.

புனர்பூசம் : கவனம் வேண்டும்.

 

 


கடகம் (Kadagam) - Cancer 

சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபார பணிகளில் மதிப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிவீர்கள். மனதளவில் சில மாற்றமான சூழல் ஏற்படும். பாசம் மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.

ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.

 

 

 


சிம்மம் (Simmam) -Leo 

பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்பு மூலம் லாபம் அடைவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி நிமித்தமான கருத்துக்களுக்கு ஆதரவு மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : சிக்கல்கள் குறையும்.

பூரம் : லாபம் கிடைக்கும்.

உத்திரம் : ஆதரவு மேம்படும்.

 

 

 


கன்னி (Kanni)- Virgo 

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

உத்திரம் : புரிதல் உண்டாகும்.

அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.

சித்திரை : மதிப்புகள் மேம்படும்.

 

 


துலாம் (Thulaam)- Libra 

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயத்தை பெருக்கிக் கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் காணப்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். நன்மை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : திருப்பங்கள் ஏற்படும்.

சுவாதி : முடிவுகள் கிடைக்கும்.

விசாகம் : பயணங்கள் கைகூடும்.

 

 


விருச்சிகம் (Viruchigam) -Scorpio

உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் காணப்படும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். சிந்தனை அதிகரிக்கும் நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

விசாகம் : திறமைகள் வெளிப்படும்.

அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கேட்டை : முயற்சிகள் கைகூடும்.

 

 


தனுசு (Dhanusu)- Sagittarius

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம். வியாபார பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். செலவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

மூலம் : குழப்பங்கள் குறையும்.

பூராடம் : பொறுமை வேண்டும்.

உத்திராடம் : சிந்தனைகள் உருவாகும்.

 

 

 


மகரம் (Magaram)- Capricorn

பொருளாதார சிக்கல்கள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவல் பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். சிந்தனைகளில் குழப்பம் தோன்றி மறையும். மூத்த உடன்பிறப்புகளின் சந்திப்புகள் ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

உத்திராடம் : சிக்கல்கள் குறையும்.

திருவோணம் : பொறுப்புடன் செயல்படவும்.

அவிட்டம் : ஆர்வமின்மை உண்டாகும்.

 

 


கும்பம் (Kumbam)- Aquarius

துணைவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். காலம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். அரசு செயல்களில் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வேலையாட்களால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வரவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : வரவுகள் கிடைக்கும்.

சதயம் : கவனம் வேண்டும்.

பூரட்டாதி : நெருக்கடிகள் நீங்கும்.

 

 

 



மீனம் (Meenam) - Pisces

பெற்றோர்களின் அரவணைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரப் பணிகளின் மேன்மை ஏற்படும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். நெருக்கமானவர்கள் வழியில் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். சாதனை வெளிப்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : நம்பிக்கை மேம்படும்.

உத்திரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.

ரேவதி : ஆதாயம் உண்டாகும்.

 

No comments

Thank you for your comments