Breaking News

சகாய் தண்டுவடமுறிவு மறுவாழ்வு மையம் சார்பில் மாற்றுத்திறனாளிக்கான மாபெரும் கலைநிகழ்ச்சி போட்டிகள் 2024!

கோவை கணுவாய் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் சகாய் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் கலைநிகழ்ச்சி போட்டிகள் சகாய் தண்டுவடமுறிவு மறுவாழ்வு மையம் நிர்வாகி பேராசிரியர் டாக்டர் தாமஸ் ஜோசப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் முன்னாள் தலைவர் ஆர்டிஎன்.கோகுல கிருஷ்ணன், நேஷ்னல் பெடரேசன் ஆஃப் பிளைண்டு சதாசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கிவைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள் 

இது குறித்து நிர்வாகிகள் கூறுகையில் 

சகாய் தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக முதுகு தண்டுவடம் முறிவு ஏற்பட்டவர்க ளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் முன்னனி தன்னார்வ தொண்டு நிறுவன மாக திகழ்ந்து வருகின்றது 

ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டிகள் நடத்தி வருகின் றோம் தற்போது இந்த ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான கலை நிகழ்ச்சி போட்டிகள் நடத்த திட்டமிட்டு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் இருந்தும் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் நடன போட்டி,பாட்டு போட்டி,இசைக்கருவிகள் வாசித்தல், மிமிக்கிரி,போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சி போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இந்த கலை நிகழ்ச்சி போட்டிகள்  அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தனர் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments