திருப்பதியிலிருந்து காஞ்சி சங்கர மடத்துக்கு திரும்பினார் சங்கராசாரியார் சுவாமிகள்
காஞ்சிபுரம், டிச.18:
காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பதி மடத்தில் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.திருப்பதியில் முகாமிட்டிருந்த சங்கராசாரியார் சுவாமிகள் காஞ்சிபுரம் திரும்பினார்.
நகர் எல்லையான சர்வதீர்த்தக்குளக்கரையில் உள்ள தவளேசுவரர் திருக்கோயில் முன்பாக காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர் தலைமையில் கோயில் ஸ்தானீகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
காமாட்சி அம்மன் கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது.மண்டல மிஸ்ரா குடும்பத்தினர் சார்பில் நீலகண்டனும் சுவாமிகளுக்கு வரவேற்பு அளித்தார்.இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு எழுந்தருளினார்.
சங்கர மடத்தின் நுழைவு வாயில் ஸ்ரீ மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.சங்கர மடத்தின் நிர்வாகிகள் கீர்த்திவாசன்,மதனகோபால் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமையிலான அக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பலரும் பர்வதமலை சிவாலயத்தின் பிரசாதத்தை வழங்கினார்கள்.காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழு தலைவர் காஞ்சி.ஜீவானந்தம்,வரவேற்புக் குழுவின் தலைவர் டி.கணேஷ் நிர்வாகிகள் பாபு,ராஜேஷ் ஜெயின்,பாஜக பிரமுகர் ஹரிகிருஷ்ணன், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை பூஜகர் கே.ஆர்.காமேசுவர குருக்கள் ஆகியோரும் உடன் இருந்தனர்.சங்கர மடத்தின் நுழைவு வாயிலில் வாணவேடிக்கைகளும் நடைபெற்றன.
No comments
Thank you for your comments