காஞ்சிபுரத்தில் தன்னார்வ ரத்ததான முகாம்
காஞ்சிபுரம், டிச.18:
காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றத்தின் 48 வது வார்டு உறுப்பினர் கார்த்திக் ஏற்பாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா வேளிங்கப்பட்டரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மண்டலக் குழு தலைவர் சாந்தி சீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.யுவராஜ், திமுக மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவர்கள் தினகரன்,ஆதித்யா கௌசிக் உள்ளிட்ட மருத்துவர்கள் குழுவினர் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள்.
முகாமில் சிலருக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவ முகாமை உத்தரமேரூர் எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான க.சுந்தர் முகாமை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
இதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் பலரும் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தார்கள். காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டனர்.
நிகழ்வின் நிறைவாக முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகளை எம்எல்ஏ க.சுந்தர் வழங்கினார். முகாமின் போது மாற்றுக்கட்சியை சேர்ந்த பலரும் திமுகவில் எம்எல்ஏ க.சுந்தர் முன்னிலையில் இணைந்தனர்.
No comments
Thank you for your comments